மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.
ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான்.
மூங்கில் அரிசி அதிகபட்ச கலோரி அளவு கொண்டது. ஒரு கப் அளவு அரிசியில் மட்டும் 160 கலோரி அளவு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான தினசரி கலோரி அளவான 2000 எனும்போது இது அதில் 8 சதவீத கலோரி அளவை பூர்த்தி செய்கிறது. அதுபோல் மூங்கில் அரிசி உணவை சாப்பிட்டவுடன் உடனடியாக செரிமானம் அடைந்து அதில் உள்ள கலோரி சத்து உடனடியாக உடலுக்கு சென்றுவிடும். அதனால் உடனடியாக உடல் சக்தி அதிகரித்துவிடும்.
மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. அதாவது ஒரு கப் மூங்கில் அரிசியில் மட்டுமே 34 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றது. விளையாட்டு செயல்பாடுகள் கொண்ட நபருக்கு தேவையான அதிகபட்ச கார்போஹைட்ரேட்ஸ் வழங்குகிறது.
ஒரு கப் மூங்கில் அரிசியில் சுமார் 3 கிராம் அளவு புரதசத்து உள்ளது. இந்த புரோட்டீன் சத்து மூலம் உடல் செல்கள் மற்றும் தசை கட்டமைப்புகளை சரிசெய்ய முடியும்.
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.
மருத்துவ பயன்கள்:
- மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
- உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.
- மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.
- மூங்கில் அரிசியை உட்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சினை தீர்வாகிறது.
- மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது.
- உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
- கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கும் தன்மையுள்ளதால் அக்கால கட்டத்தில் பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.
Reviews
There are no reviews yet.